வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி தமிழ்நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், அனைத்து தொழிற்சங்கம், விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.