பெரம்பலூர் மாவட்டத்தில் கீழக் கணவாய், செல்லியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாகும் மருதையாறு பேரளி, கொளக்காநத்தம், மூங்கில் பாடி, சிறுகன்பூர் உள்ளிட்ட கிளை ஓடைகளை ஆங்காங்கே இணைத்துக் கொண்டு சுமார் 40 கி.மீ தூரம் பாய்ந்து பின்பு அரியலூர் மாவட்டத்தில் 35 கி.மீ பயணித்து இறுதியில் கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது.
மருதையாற்றின் ஆக்கிரமிப்புகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
பெரம்பலூர்: சீமைக்கருவேல மரங்கள், முட்புதர்கள் மற்றும் ஆக்கிரமிப்பால் நிறைந்து காணப்படும் மருதையாற்றை சீரமைக்க வேண்டும் என பெரம்பலூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்பு வரை வருடத்தில் ஒன்பது மாதங்கள்கொள்ளிடம் ஆற்றில்தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த ஆறு, கிளை ஓடைகளில் எவ்வுளவு பெரிய மழை பெய்தாலும் தற்போது வறண்டு காணப்படுகிறது. மேலும், ஆற்றின் பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள், முட்புதர்கள் காணப்படுவதோடு ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில் வாய்க்கால்கள் போல காட்சியளிக்கிறது.
ஆகவே, மருதையாறு, கிளை ஓடைகளை முறையாக அளவீடு செய்து கரைகள் அமைத்து சீமைக்கருவேல மரங்கள் அகற்றி ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.