பெரம்பலூர் மாவட்டத்தில் வெண்பாவூர், அன்னமங்கலம், முருகன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன.
இதனிடையே பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து ஐந்து மாத காலமாக மான்வேட்டை நடப்பதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் வேப்பந்தட்டை வனப்பகுதிகளில் வனத் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த வகையில் ஆறு பேர் கொண்ட கும்பல் வனப்பகுதிகளில் மானை வேட்டையாடி இருப்பது தெரியவந்ததை அடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மான் வேட்டையாடிய ஆறு பேர் கொண்ட கும்பலை வனத் துறையினர் கைது செய்ய முயன்றனர். ஆனால் அதில் ஐந்து பேர் தப்பி ஓடிவிட்டனர்.
மான் வேட்டையாடிய நபர் கைது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மதுரை முத்து என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வேட்டையாடப்பட்ட மான், பயன்படுத்தப்பட்ட கத்தி, டார்ச் லைட், மூன்று துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பியோடிய ஐந்து பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.