தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் தேடி வந்த பெண் மான் உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை - சாலையை கடக்க முயன்ற மான் உயிரிழப்பு

பெரம்பலூர்: தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த இரண்டு வயது பெண் மான் சாலையை கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.

தாண்ணீர் தேடி வாந்த மான் உயிரிழப்பு

By

Published : Sep 2, 2019, 10:20 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர், வெண்பாவூர், வடகரை, முருக்கன்குடி, அன்னமங்கலம், களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில், முயல் உள்ளிட்ட உயிரினங்கள் வசிக்கின்றன. இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் புதுக்குறிச்சி ஏரி பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 2 வயதுடைய புள்ளி மான் சாலையை கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.

சாலையை கடக்கும் போது உயிரிழந்த மான்

மான் இறந்த சம்பவம் பற்றி அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் மான்கள் இறப்பு அதிகளவில் இருப்பதால் வனப்பகுதிகளில் கூடுதல் தண்ணீர் தொட்டிகளை அமைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details