பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, வெண்பாவூர், வடகரை, முருகன்குடி, பாடாலூர், அன்னமங்கலம், சின்னாறு உள்ளிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக உள்ளன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவு வாழ்கின்றன.
இந்நிலையில், மான், மயில் உள்ளிட்டவை உணவு, தண்ணீரை தேடி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்துவிடுவது சகஜம். இதனிடையே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை திருமாந்துறை என்ற இடத்தில் இன்று காலை சாலையை கடக்க முயன்ற 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.