தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகள் தற்கொலையால் மனமுடைந்த தந்தையும் தற்கொலை - பெரம்பலூரில் சோகம் - சிறுமி மகாலெட்சுமி தற்கொலை

பெரம்பலூர்: பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து கிணற்றில் குதித்து மகள் தற்கொலை செய்துகொண்டதால், அவரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல், அவரது தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide
suicide

By

Published : Feb 14, 2020, 9:15 AM IST

பெரம்பலூர் நொச்சியம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (48) இவரது மகள் மகாலெட்சுமி (16). 10 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்ததால், தனியார் டியூசன் சென்டரில் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் மகாலெட்சுமி தனக்கு மூக்குக் கண்ணாடி வாங்கித்தருமாறு அவரது தந்தையிடம் கேட்டதற்கு பெற்றோர் அவரைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகாலெட்சுமி, தனது தாத்தா ராமன் என்பவருக்குச் சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தத் தகவறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்தனன் தலைமையிலான வீரர்கள் துணையுடன் கிணற்றுக்குள் இறங்கி மகாலெட்சுமியை சடலமாக மீட்டு உடல்கூறாய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மகளின் தற்கொலையால் மனமுடைந்து தந்தையும் தற்கொலை

இதனிடையே மகள் தற்கொலை செய்துக்கொண்ட தகவலறிந்த தந்தை பொன்னுசாமி மகளின் இழப்பை தாங்கிக்கொள்ள இயலாமல் தனது வீட்டிற்குச் சென்று விஷம் அருந்தி தானும் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து மகள், தந்தை உயிரிழந்த சம்பவம் நொச்சியம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கேஸ் பற்றவைக்கும்போது தீ - சிகிச்சைக்காக சென்னை வந்த தம்பதி பலியான சோகம்!

ABOUT THE AUTHOR

...view details