பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் இன்று (செப்டம்பர் 5) பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனிடையே, திருச்சி மாவட்டம் லால்குடி பெருவளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நடராஜன் என்பவர் இருசக்கர வாகனத்தில் பாடாலூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
தமமுக தலைவருடன் வந்த கார் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு! - தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம்
பெரம்பலூர்: பாடாலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனுடன் வந்த கார் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
அப்போது தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனுடன் வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கூலித் தொழிலாளி நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் காவல் துறையினர் உயிரிழந்த நடராஜனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த பெரம்பலூரைச் சேர்ந்த கரன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.