இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்திட சைக்கிள் பேரணி சென்னையில் மே 25ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்திய மாணவர் சங்கம் உறுப்பினர்கள் 1500 கிலோமீட்டர் வரை சைக்கிள் பேரணியில் ஈடுபடவுள்ளனர்.
அரசுப் பள்ளிகளை பாதுக்காத்திட இந்திய மாணவர் சங்கம் சைக்கிள் பேரணி - சைக்கிள் பேரணி
பெரம்பலூர்: அரசுப் பள்ளிகளை பாதுக்காத்திடக் கோரி பெரம்பலூரில் 50க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.
பெரம்பலூரில் அரசுப் பள்ளிகளை பாதுக்காத்திட இந்திய மாணவர் சங்கம் சைக்கிள் பேரணி
சென்னை, கடலூர், கோவை, குமரி ஆகிய நான்கு முனைகளில் இருந்து இந்த சைக்கிள் பேரணிப் பயணம் திருச்சியில் சங்கமிக்க உள்ளது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளை காத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டாோர் பெரம்பலூரில் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.