அந்த மனுவில், "பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான கறிக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இந்த கோழி பண்ணை உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் மானியம் சரிவர வழங்கவில்லை. இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம்.
வங்கி கடனை ரத்து செய்யக்கோரி கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மனு - மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர்: வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு வழங்கும் மானியத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
meet chicken owners petition
கோழி உற்பத்தி அதிகம் இல்லாததால் வங்கியில் வாங்கிய கடனை ஒழுங்காக செலுத்த முடிவதில்லை. இதனால் மத்திய அரசு வழங்கும் மானியத்தை பாரபட்சம் இன்றி வழங்கவும், கடனை ரத்துச் செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.