பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இ.கம்யூ., தலைவரை அவதூறாகப் பேசியவரை கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! - ஆர்ப்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி
பெரம்பலூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரை அவதூறாக பேசிய நபரை கைது செய்ய வலியுறுத்தி கம்யூனிஸ்ட் காட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஞானசேகரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், "முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தரம் தாழ்ந்த முறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தையும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவையும் தவறாகச் சித்திரித்து செய்தி வெளியிட்ட நபர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.