வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராசு. இவர் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து திருச்சி ஓயாமாரி இடுகாட்டில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.