தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த செலவில் சாலை அமைத்த ஒன்றிய கவுன்சிலர்!

பெரம்பலூர்: அரசின் நிதியை எதிர்பார்க்காமல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தன் சொந்த செலவில் 12 லட்சம் ரூபாயில் ஒன்றிய கவுன்சிலர் சாலை அமைத்துக் கொடுத்துள்ளார்.

Councilor built the road at his own expense
Councilor built the road at his own expense

By

Published : Jul 31, 2020, 6:00 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்பதாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் தமிழரசி.

இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தலின்போது சாத்தநத்தம் கிராம பொதுமக்கள் பொருள்கள் எடுத்துக்கொண்டு பயணம் செல்வதற்கும், விவசாய பொருள்கள் எடுத்துச் செல்வதற்கும் அருகிலுள்ள வேப்பூர் கிராமத்திற்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றி செல்கின்றனர்.

இந்நிலையில் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் விரைவாக செல்வதற்கு சாலை அமைத்து கொடுப்பேன் என்று தமிழரசி வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அதன்படி வெற்றி பெற்ற கவுன்சிலர் தமிழரசி சாத்த நத்தம் கிராமத்தில் இருந்து வேப்பூர் செல்வதற்கு தனது சொந்த நிதியில் ரூபாய் 12 லட்சம் செலவு செய்து சாலை அமைத்துக் கொடுத்தார்.

இதன் மூலம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே அருகிலுள்ள வேப்பூர் கிராமத்திற்குச் செல்ல முடியும். சாலைப் பணிகள் முழுவதுமாக முடிந்து, இன்று(ஜூலை 31) சாத்தநத்தம் வேப்பூர் சாலை திறந்து வைக்கப்பட்டது. வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை சாலையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை மற்றும் கொடுத்த வாக்கினை நிறைவேற்றிய கவுன்சிலரை அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து வாழ்த்தினர்.

ABOUT THE AUTHOR

...view details