பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்து 526 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடிசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான பகுதியில் பருத்தி அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கரோனாவால் பாதித்த பருத்தி விற்பனை: விவசாயிகள் கவலை - கரோனா செய்திகள்
பெரம்பலூர்: கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பருத்தி விற்பனை தடைபட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
cotton-sales-in-perambalur
அதனால் பருத்தியை அறுவடைசெய்து பத்திரப்படுத்த முடியாமலும், விற்பனைக்கு வழியில்லாமலும் விவசாயிகள் தவித்துவருகின்றனர். அதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய-மாநில அரசுகள் அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க:பெரம்பலூர் அருகே கள்ளச்சாராயம் ஊறல் போட்ட நபர் கைது