தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலப்பட பருத்தி விதையால் விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை - கலப்பட பருத்தியால் விளைச்சல் பாதிப்பு

பெரம்பலூர்: கலப்படம் செய்த பருத்தி விதையால் விளைச்சல் பாதித்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கலப்பட பருத்தியால் விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் கவலை!
கலப்பட பருத்தியால் விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் கவலை!

By

Published : Feb 5, 2020, 3:12 PM IST


விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மழையை நம்பியே பெருவாரியான மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்கின்றனர். அதில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சிறு தானிய வகைகள் ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

ஆலத்தூர் வட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயமும் வேப்பூர் வட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளமும் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. அதேபோன்று வேப்பந்தட்டை, எசனை, தொண்டைபாடி, வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடியும் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட பருத்தி வயலுக்கு அதிகளவு மருந்து தெளித்ததாலும் 5 ஏக்கரில் விதைத்த பருத்தி வயலில் வெறும் 25 மூட்டை மட்டுமே மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், தனியாரிடம் வாங்கிய பருத்தி விதைகள் கலப்படமான விதைகளாக இருந்ததால் மகசூல் குறைந்துள்ளது என்று கூறும் விவசாயிகள் பருத்தியின் விலையும் குறைவாக உள்ளது என்கின்றனர்.

இதையும் படிங்க...மெரினா கடற்கரை கடைகளின் வாடகை விவரத்தை தெரிவித்த மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details