தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா எதிரொலி: வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் மூடல்! - வாலீஸ்வரர் திருக்கோயில்

பெரம்பலூர்: கரோனா வைரஸ் அச்சம் காரணமாக வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

close
close

By

Published : Mar 19, 2020, 10:15 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் பகுதியில் அருள்மிகு வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பராந்தக சோழன் என்பவரால் கி.பி 9ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 10ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிக்கப்பட்டது.

இக்கோயில் வானர அரசரான வாலி பூஜித்து சாப நிவர்த்தி பெற்றதால் இவ்வூர் வாலிகண்டபுரம் என்ற பெயர் பெற்றது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்தலத்தை அறநிலையத் துறை பராமரிக்கப்படுகிறது.

இதனிடையே உலகையை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி காரணமாக வாலீஸ்வரர் கோயில் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details