கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. அந்தவகையில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 69 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 641ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 442 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் 190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை மாவட்டத்தில் 9 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 69 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.