பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் நவம்பர் 25ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வரவுள்ளார்.
பெரம்பலூரில் முதலமைச்சர் விழாவையொட்டி அரசு அலுவலர்களுக்கு கரோனா பரிசோதனை! - Tamilnadu cm at perambalur
பெரம்பலூர்: வரும் நவம்பர் 25ஆம் தேதி வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் வருவதையோட்டி, கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
peram
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொள்வது மட்டுமன்றி பத்திரிகையாளர் சந்திப்பிலும் பங்கு பெறுகிறார்.
இதைக் கருத்தில் கொண்டு, கூட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு அலுவலர்கள், சுய உதவிக்குழு பெண்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இன்று கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது