தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பீதி : எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - பெரம்பலூர் ஆட்சியர் உறுதி! - எதிர்க்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்

பெரம்பலூர் : கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 220 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாந்தா தகவல் தெரிவித்துள்ளார்.

Corona Panic: We Are Ready To Resist - Perambalur Collector
கரோனா பீதி : எதிர்க்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - பெரம்பலூர் ஆட்சியர் உறுதி!

By

Published : Mar 31, 2020, 6:55 PM IST

சீனாவிலிருந்து பரவி உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று, குறிப்பாக இந்தியாவில் தீவிரமாகி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோவிட் -19 பெருந்தொற்றால் இந்தியாவில் 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் உயிரிழந்தனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

தமிழ்நாட்டில் வைரஸ் பெருந்தொற்று தீவிரமடைந்துவருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது. இதனால் வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் கரோனா பரவல் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ,“பெரம்பலூர் மாவட்டத்தின் ஆலத்தூர், குன்னம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது. மேலும், அனைத்து பகுதிகளில் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

கரோனா அறிகுறி கண்டறியும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு சிகிச்சைக்கான தனி வார்டுகளில் அனுமதிக்கப்படுவர். கரோனா வைரஸ் தொற்றுப்பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 220 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. இதுவரை ஒருவர் கூட கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிப்படையவில்லை.

கரோனா பீதி : எதிர்க்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - பெரம்பலூர் ஆட்சியர் உறுதி!

ஏப்ரல் 2ஆம் தேதி முதல் மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அந்தந்த பகுதியில் முகாமிட்டு ரூ. 1000 மற்றும் பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் அதிகமான எண்ணிக்கையில் கூடாமல் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா

இந்தக் கூட்டத்தில் குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமா அத்தின் சர்வதேச மத மாநாட்டில் பங்கேற்றவர்களில் 16 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பிற்குள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டுள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத் துறை கூறியிருந்தது.

இதையும் படிங்க :'தொழிலாளர்கள், மாணவர்களின் வீடு வாடகைக்கு நோ' - தமிழ்நாடு அரசு!

ABOUT THE AUTHOR

...view details