பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுக்கு உடல் நலம் குன்றியதை அடுத்து அவர் மருத்துவனைக்கு சென்று பரிசோதனைசெய்தார். அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, அவரது குடும்பத்தினரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனையில் அவரது கணவரும் ஐஏஎஸ் அலுவலுருமான பார்த்திபன், அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
பின்னர், நிஷா பார்த்திபன் குடும்பத்தினர் பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.