பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாகும். இங்கு திங்கள், வெள்ளி மற்றும் அமாவாசை தினங்களில் மட்டுமே சிறப்பு பூஜை நடத்தப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக மூடி கிடந்த கோயில்கள், தமிழ்நாடு முழுவதும் அரசு விதிமுறைப்படி கடந்த 1ஆம் தேதி திறக்கப்பட்டன.
அந்த வகையில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திறக்கப்படவிருந்த நிலையில், அக்கோயில் பூசாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி கோயில் மூடப்பட்டது.