தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுகாதாரப் பணிகள் முன்னாள் இணை இயக்குநர் கரோனாவால் உயிரிழப்பு! - Corona death

பெரம்பலூர்: கரோனா பாதிப்பால் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் முன்னாள் இணை இயக்குநர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

death
doctor

By

Published : Sep 16, 2020, 6:55 PM IST

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1581. சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1456 பேர். மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 106 பேர் ஆகும்.

மேலும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணிகள் முன்னாள் இணை இயக்குநராகப் பணியாற்றிய மனோகரன் என்பவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு கரோனா காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு காலமானார். கரோனா நோய்த்தொற்றால் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details