தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் 300ஐ கடந்தது கரோனா பாதிப்பு - பெரம்பலூர் கரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 26) 26 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 322ஆக உயர்ந்துள்ளது.

Corona guarantees 26 more in Perambalur!
Corona guarantees 26 more in Perambalur!

By

Published : Jul 27, 2020, 8:00 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 26) 26 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடி காடு கிராமத்தில் 12 பேருக்கும், அதேபோல் நகர்ப்புற பகுதியான துரைமங்கலம், நான்கு ரோடு, கல்யாண் நகர், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 26 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 322ஆக உயர்ந்துள்ளது.

மேலும், மாவட்டத்தில் இதுவரை 212 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பிவுள்ளனர். பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details