கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வை அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பாடல் மூலமாகவும், குறும்படம் மூலமாகவும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தை சேர்ந்த நடராஜன், இசைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கரோனா குறித்தும்,கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை , சுகாதார துறை , தூய்மை பணியாளர்களின் பங்கு குறித்தும் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.