தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாற்று நட்டு... பாட்டுப்பாடி.. தடுப்பூசி போட வைத்த சுகாதாரத்துறை துணை இயக்குநர்... வைரல் வீடியோ! - Perambalur news

அரியலூரில் நாற்று நட்டு பொதுமக்களிடம் ஆடிப்பாடி தடுப்பூசி செலுத்த வைத்த சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குநரின் வீடியோ வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

By

Published : Oct 12, 2021, 8:57 PM IST

பெரம்பலூர்: அரியலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகவும் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால், விவசாயப் பணியில் பெரும்பாலானோர் குறிப்பாக பெண்கள் வயல் வேலைக்குச் சென்று விடுவதால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

மக்களின் பாணியில் சென்று தடுப்பூசிப் போட வைத்த சுகாதாரத்துறை துணை இயக்குநர்

இதனையறிந்த அரியலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் கீதாராணி நேரடியாக வயலுக்குச்சென்று, விவசாயப் பணியில் ஈடுபட்ட பெண்களுடன் நாற்று நட்டு, ஆடிப்பாடி, நடனமாடி, மக்களிடம் தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன்படி பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

வயல்வெளிக்குச் சென்று அவர்கள் பாணியிலேயே பேசி, அவர்கள் அனைவரையும் ஊசி போட வைத்த செயல் சுகாதாரத்துறை துணை இயக்குநரின் செயல் பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக நிர்வாகி

ABOUT THE AUTHOR

...view details