வரலாறு காணாத அளவிற்குச் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெங்காய விலை உயர்வைக் கண்டித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு சின்ன வெங்காயத்தை பார்சல் செய்து மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
பிரதமர், மத்திய நிதியமைச்சருக்கு சின்ன வெங்காயம் பார்சல் அனுப்பிவைப்பு! - onion send parcel to modi and finance minister
பெரம்பலூர்: சின்ன வெங்காயம் விலை உயர்வைக் கண்டித்து பாரத பிரதமர் மோடிக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் அஞ்சல் மூலம் சின்ன வெங்காயம் பார்சல் அனுப்பிவைக்கப்பட்டது.
![பிரதமர், மத்திய நிதியமைச்சருக்கு சின்ன வெங்காயம் பார்சல் அனுப்பிவைப்பு! onion parcel](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5289860-565-5289860-1575636006555.jpg)
சின்ன வெங்காயம் பார்சல்
சின்ன வெங்காயம் பார்சல் அனுப்பிய காங்கிரஸ் கட்சியினர்
இது குறித்து பேசிய அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து சின்ன வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரைராஜ் காந்தி, கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:புதிய உச்சத்தில் வெங்காய விலை!