தமிழ்நாடு

tamil nadu

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்த கம்யூனிஸ்ட்கள்

பெரம்பலூர்: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

By

Published : Dec 2, 2020, 4:08 PM IST

Published : Dec 2, 2020, 4:08 PM IST

ETV Bharat / state

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்த கம்யூனிஸ்ட்கள்

Communists decide to besiege Perambalur Collectorate
Communists decide to besiege Perambalur Collectorate

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரங்கசாமி, விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், டெல்லியில் நடைபெறும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில் வரும் 4ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தோழமை கட்சிகளின் ஆதரவோடு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 3:45 மணி நேர பேச்சுவார்த்தை... தேநீரைகூட அருந்தாத விவசாயிகள்: நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details