பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! - அண்ணா பல்கலை துணை வேந்தர்
பெரம்பலூர்: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில், "மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.