இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் பாலன் இல்லம் படத்தை பதிவிட்டு அதன்மீது விபச்சார விடுதி என எழுதி அவதூறு பரப்பும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டது. அதேபோல் கோபி கண்ணன் என்பவர் தனது ஃபேஸ்புக் பதிவில் விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு படத்தை தவறான முறையில் சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலம் அவதூறு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகத்தை இழிவுபடுத்தி சமூக ஊடகங்கள் மூலம் ஆபாசம், அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சமூக ஊடகங்கள் மூலம் ஆபாச அவதூறுகள் பரப்பும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமை ஏற்றார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.