தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய சட்டம் மூலம் நாடு நாசமாகும் - இரா. முத்தரசன்

விவசாயிகளைப் பாதிக்கும் சட்டத்தின் மூலம் நாடு அபாயகரமான இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது எனப் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.

இரா. முத்தரசன்
இரா. முத்தரசன்

By

Published : Oct 2, 2020, 12:06 AM IST

பெரம்பலூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று (அக். 1) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை தீரன் நகர் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஞானசேகர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்கள், தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் நாடு அபாயகரமான இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

அதேசமயம் சர்வாதிகாரத்தின் உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் வழிகாட்டுதலின்படி ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது மனுதர்ம சட்டத்தின்படி ஆட்சி நடைபெறுகிறதா? என்று கேள்வி எழுந்துள்ளது.

மேலும் விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து வருகின்ற 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹத்ராஸ் விவகாரம்: தடுப்பு காவலில் ராகுல், பிரியங்கா காந்தி

ABOUT THE AUTHOR

...view details