பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்திட குடியுரிமையைப் பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை தூண்டிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது டெல்லி காவல் துறையினர் குற்றவியல் வழக்குப்பதிவு செய்தனர்.
பெரம்பலூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - Marxist communist party
பெரம்பலூர்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களைத் தூண்டிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்ததைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
protest
இதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்