பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், நரசிம்மன். கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் ஆர்க்கிடெக் படிப்பு பயின்று வரும் இவர், இளம் வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.
பல்வேறு ஓவிய படைப்புகளையும் வரைந்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய ‘குறளோவியம்’ புத்தகத்திலுள்ள வரிகளை வைத்து சுமார் 40ஆயிரம் எழுத்துகளால், கலைஞர் கருணாநிதியின் உருவத்தை ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார்.
மாணவருக்கு குவியும் பாராட்டு