தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாட்டூ குத்தியதால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு! - கல்லூரி மாணவர் உயிரிழப்பு

பெரம்பலூர் பகுதியில் கழுத்துப் பகுதியில் டாட்டூ குத்தியதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 10:31 PM IST

பெரம்பலூர் மாவட்டம் மூங்கில் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பரத் (22). இவர் அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை ஆங்கில கல்வியை பயின்று வருகிறார். கடந்த 25 நாள்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு இன்ப சுற்றுலா சென்ற பரத், அங்கிருந்த கடை வீதியில் பச்சை குத்தும் கடைக்குச் சென்று தனது நண்பர் 5 பேருடன் கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டூ குத்திக் கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் வீடு திரும்பிய பரத், வயல் வெளியில் விவசாய பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் பச்சை குத்திய கீழ் பகுதியில் சிறியளவில் புண் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு, அவரது அக்குள் பகுதியில் நெரிக்கட்டியுள்ளது. கட்டி பெரிதாகி கடுமையான வலி ஏற்படவே அவரது குடும்பத்தார் அவரை 15 நாள்களுக்கு முன்பு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்தனர். பின்னர், அந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மயங்கி விழுந்த பரத்தை அவரது உறவினர்கள் அவசர ஊரதி உதவியுடன் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள், ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனால் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாகவும், மேலும் இவரது தற்போதைய உடல்நிலை சிகிச்சையை ஏற்காது எனவும் கூறியுள்ளனர். இதனால் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையிலேயே பரத் உயிரிழந்துள்ளார். கல்லூரி மாணவர் தனது ஐந்து நண்பர்களுடன் பச்சைக் குத்தி வந்துள்ள நிலையில் இவர் மட்டும் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி.. 6 பேரை அதிரடியாக கைது செய்த சென்னை போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details