தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ் அச்சம்: குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் - பெரம்பலூரில் நடந்த மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா

பெரம்பலூர்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழாவில் குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா
ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா

By

Published : Mar 18, 2020, 11:40 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை, கால்நடை துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பாக மொத்தம் 408 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 10 லட்சத்து 56 ஆயிரத்து 303 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சிறப்பு மனுநீதி நாள் நிறைவு முகாமில் குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா வைரஸ் தடுப்பு குறித்து மாவட்டச் சுகாதாரப் பணிகள் துறை சார்பில் கைகளைச் சுத்தம் செய்யும் முறை, வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து அங்கு வந்த பள்ளிக் குழந்தைகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், அரசு அலுவலர்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தீவிரமடையும் கரோனா- தமிழ்நாடு தயார் நிலையில் உள்ளதா? பார்க்கலாம்

ABOUT THE AUTHOR

...view details