கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை ஏழு பேர் கரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனிடையே வி.களத்தூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் அய்யாதுரை என்பவரின் தாய் அங்கம்மாள் (65) ஏப்ரல் 21ஆம் தேதி மாலை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தாயின் இறுதிச் சடங்கை முடித்த கையோடு அரைமணி நேரத்தில் கரோனா தடுப்பு தூய்மைப் பணியில் அய்யாதுரை ஈடுபட்டார்.