தமிழ்நாடு

tamil nadu

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் சித்திரைத் திருவிழா ரத்து

பெரம்பலூர்: ஊரடங்கு உத்தரவு காரணமாக பிரசித்திப் பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ரத்துசெய்யப்பட்டுள்ளது.

By

Published : Apr 21, 2020, 2:26 PM IST

Published : Apr 21, 2020, 2:26 PM IST

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ளது அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயில் தமிழ்நாட்டின் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். மதுரையை எரித்த கண்ணகியின் சினம் தனித்த புண்ணிய பூமியாக விளங்குகிறது.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

மேலும் திங்கள், வெள்ளி, அமாவாசை, பெளர்ணமி ஆகிய தினங்கள் மட்டுமே இத்திருக்கோயில் திறந்திருக்கும். இவ்வாறு பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பூச்சொரிதல் விழா, சித்திரைத் திருவிழா நடைபெறும்.

இதனிடையே கரோனா வைரஸ் தொற்று குறித்து ஊரடங்கு உத்தரவு தற்போது நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு வருகின்ற 28ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த பூச்சொரிதல் விழா மே 5ஆம் தேதிமுதல் தொடங்கப்பட உள்ளது.

மேலும் காப்புக்கட்டுதல், தேர்த்திருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் செயல்அலுவலர் அருண் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதேசமயம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்திக் குத்து வாங்கிய காவலர்கள் - பிடிபட்ட கஞ்சா வியாபாரி

ABOUT THE AUTHOR

...view details