பெரம்பலூரில் இன்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையத்தை பேரணி வந்தடைந்தது.
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி! - குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு
பெரம்பலூர்: குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்தப் பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
awarness-rally
இந்தப் பேரணியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியவாறும் மாணவர்கள் சென்றனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்