தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் 1,614 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவி - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்: மாவட்டத்தில் ரூ. 23.58 கோடி மதிப்பில் 1,614 பயனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

1,614 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவி
1,614 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவி

By

Published : Dec 17, 2020, 10:46 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.17) புதிய திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ. 24.41 கோடி மதிப்பில் எட்டு இடங்களில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

1,614 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவி

ரூ. 19.25 கோடி மதிப்பில் நான்கு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ. 23.58 கோடி மதிப்பில் 1,614 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். செய்தி, மக்கள் தொடர்புத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ராயபுரத்தில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதிய திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details