தமிழ்நாடு முதலமைச்சர் நாளை மறுநாள் (டிச. 17) பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுசெய்யவுள்ளார். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் வருகை: வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்திய செய்திகள்
பெரம்பலூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்
இதன் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும். இதற்காக பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகைதரும் முதலமைச்சரை வரவேற்கும்விதமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அலங்கார வளைவுகள், விளம்பரப் பதாகைகள், மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இது தவிர பெரம்பலூர் நகர் பகுதியிலும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க: மௌனமான முறையில் தேர்தல் பரப்புரை செய்யும் கமல்ஹாசன்