பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பட்டம் செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயில் குபேர பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
பிரசித்திப்பெற்ற இந்தக் கோயிலில் தைப்பூச கொடியேற்ற விழா கணபதி பூஜை உள்ளிட்ட யாக பூஜைகளுடன் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
கொடியேற்றத்துடன் தொடங்கிய செட்டிகுளம் தைப்பூச விழா பின்னர், கோயிலிலுள்ள கொடிமரத்தில் தைப்பூச விழாவின் கொடியேற்றம் நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் தைப்பூசத்தன்று நடைபெறும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
இதையும் படிங்க: தைப்பூசத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வு !