தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர்களிடம் பணமோசடி! ஓய்வுபெற்ற கல்வித் துறை ஊழியரிடம் விசாரணை - perambalur

பெரம்பலூர்: வட்டார தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், ஆசிரியர்களுக்கான அரசு வைப்பு நிதியில் கடனுதவி பெற்றுத் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

Education dep

By

Published : Jun 21, 2019, 9:17 AM IST


பெரம்பலூர் அருகே குன்னம் வட்டம் ஜெய்ப்பூரில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து, கடந்த மே மாதம் ஓய்வு பெற்றவர் தமிழ்ச்செல்வன்.

இவர், தனது பணி காலத்தில் வேப்பூர் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலரிடம் அவர்களது அரசு வைப்பு நிதியிலிருந்து கடனுதவி பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களை நம்பவைத்து, மாவட்ட கருவூலத்தில் இருந்து கடன் பெற்று ஆசிரியர்களுக்குத் தராமல் தனது வங்கிக் கணக்குக்கு மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் அலுவலகத்தின் காட்சிகள்

இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலர் அருள் அரங்கன் பள்ளி ஆசிரியர்களின் பணத்தை மோசடி செய்தாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓய்வுபெற்ற கல்வித் துறை ஊழியர் தமிழ்ச்செல்வனிடம் விசாரணை செய்துவருகிறார்.

அந்த மோசடி புகார் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details