தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மத்திய அரசின் திட்டம் கானல் நீர் போன்றது' - விவசாயிகள் சங்கம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

பெரம்பலூர்: விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள் கானல் நீர் போல் உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

central govt farmers scheme looks like mirage - TN farmers association
விவசாயிகள் சங்கம்

By

Published : Feb 7, 2020, 4:34 PM IST

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமியின் 96ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நாராயணசாமியின் உருவ சிலைக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

அதனைத்தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்கம் மாநில செயலர் ராஜா சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் விதமாக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜா சிதம்பரம், ”நாராயணசாமி பிறந்தநாள் விழா என்றாலே கோரிக்கை முழக்கத்தோடுதான் விழா நடைபெறும். மத்திய அரசு விவசாயிகளுக்கு அறிவிக்கும் திட்டம் கானல் நீர் போல உள்ளது. காப்பீடு திட்டத்தை பொறுத்தவரையில் சரியாக பயனளிக்கக் கூடிய திட்டங்கள் விவசாயிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. தனி நபர் காப்பீடு திட்டம் அறிவிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தாண்டு பயிரிடப்பட்ட பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் ஆகிய அனைத்து விவசாய பொருள்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள் பருத்தி கொண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்” என்றார்.

தமிழ்நாடு விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்


இதையும் படிங்க: காபி விளைச்ச‌ல் உயர்வு; விவசாயிகள் மனநிறைவு

ABOUT THE AUTHOR

...view details