பெரம்பலூர் அருகே சின்ன வெங்காய தொடர் திருட்டை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்திக் கண்காணித்து வருகின்றனர். வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், பாடாலூர், செட்டிகுளம், நாட்டார் மங்கலம், சத்திரமனை, அம்மாபாளையம், எசனை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் பட்டறை போட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சின்ன வெங்காய திருட்டை கண்காணிக்க சிசிடிவி பொருத்திய வியாபாரிகள் - சின்ன வெங்காய திருட்டு
பெரம்பலூர்: சின்ன வெங்காய தொடர் திருட்டை கண்காணிக்க சின்ன வெங்காய வியாபாரிகள் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர்.
onion godown
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆலத்தூர் வட்டத்தில் செட்டிகுளம், இரூர், நாட்டர் மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் சின்ன வெங்காயம் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது.
இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் நாட்டார் மங்கலம் கிராமத்தில் உள்ள சின்ன வெங்காய வியாபாரிகள் சின்ன வெங்காய திருட்டை கண்காணிக்க தற்போது சிசிடிவி பொருத்திக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சின்ன வெங்காய பட்டறையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.