தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய மக்கள் கோரிக்கை! - kollidam water

பெரம்பலூர்: துறைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை நகராட்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

cauvery water leakage

By

Published : Nov 9, 2019, 10:50 PM IST

பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழ்நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தொடர்ந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.

இந்தக் குழாயை சரிசெய்வதற்கு நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். மேலும்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

எனவே, உடனடியாக நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து குழாயை சரிசெய்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்பது பெரம்பலூர் பகுதி மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

இதையும் படிங்க: ’சமரச முயற்சியின் அடிப்படையில் அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ - திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details