தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் தத்தளித்த பூனையை மீட்ட சிறுவர்கள்; பொதுமக்கள் பாராட்டு! - அரசு மருத்துவமனை

பெரம்பலூர் : ஆலத்தூர் அருகே உள்ள அரசு மருத்துவமனை கிணற்றில் தத்தளித்த பூனையை மீட்ட சிறுவர்களை மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கிணற்றில் விழுந்த பூனையை மீட்ட சிறுவர்கள்

By

Published : Sep 15, 2019, 8:38 PM IST


பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் காரை கிராமத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் படிக்கட்டுகள் இல்லாத ஒரு குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் பூனை ஒன்று உள்ளே விழுந்து வெளிய வர முடியாமல் கடந்த இரண்டு நாட்களாக தவித்து வந்துள்ளது.

கிணற்றில் விழுந்த பூனையை சிறுவர்கள் மீட்கும் காட்சி

இந்நிலையில், காரை கிராமத்தைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள் வசந்த், லோகேஷ், அருள் செல்வன் ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்த பூனையை பெரும் முயற்சியெடுத்து மீட்டனர். பூனையை மீட்ட சிறுவர்களின் இந்த செயலை மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details