பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் உலக சாமிதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் "மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புடன், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும், சிதம்பரத்திலிருந்து, அரியலூர், பெரம்பலூர், ஆத்தூர், சேலம் இருப்புப்பாதை தொடர்வண்டிகளை இயக்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் மேற்கொள்ள வேண்டும்.