பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வி.களத்தூர் மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் குமார் (35). இவர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சின்னாறு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, குமார் மீது மோதியது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு - தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள்
பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்றவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Car hits and one person died in Trichy - chennai national highway
இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.