தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் ஓட்டுநர்கள் விவகாரம்: வட்டார போக்குவரத்து அலுவலகம் முற்றுகை!

பெரம்பலூர்: கார் ஓட்டுநர்கள் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Car drivers protest
ஆர்ப்பாட்டம் நடத்திய கார் ஓட்டுநர்கள்

By

Published : Oct 21, 2020, 6:35 PM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் பகுதியில் வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர், கடந்த 10 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட வாடகை கார்களை வைத்து இயக்கிவருகின்றனர்.

இந்நிலையில், இன்று (அக். 21) 50-க்கும் மேற்பட்ட வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் பெரம்பலூர் தண்ணீர் பந்தல் அருகேவுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காருடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது, "அப்பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் சொந்த வாகனத்தை வைத்து வாடகைக்கு ஓட்டி வருகின்றனர். மேலும், நாங்கள் நிறுத்தக்கூடிய கார் ஸ்டாண்ட் பகுதியிலேயே நிறுத்தி, வாடகைக்கு ஓட்டுகிறார்கள்.

இதனால், அடிக்கடி அவர்கள் மூலமாக தகராறு ஏற்படுகிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

இதற்கிடையே, அவர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் மனு கொடுத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details