சென்னை அண்ணா நகர்ப் பகுதியில் டிராவல்ஸ் நடத்திவரும் அழகர்சாமி தனது சொந்த ஊரான போடியிலிருந்து கார் மூலம் சென்னைக்கு சென்று கொண்டிருந்தபோது, பெரம்பலூர் அருகே நாரணமங்கலம் என்ற இடத்தில் காரின் பின்பக்க டயர் வெடித்து சாலையின் நடுவே தடுப்புச்சுவர் மீது மோதியது.
பின்பக்கம் வந்த கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ராபின்சன், காவலர்கள் கமலா, கார்த்தி, அன்பரசு ஆகியோர் விபத்தில் சிக்கிய வாகனத்தின் மீது எதிர்பாரதவிதமாக மோதியதில் இரண்டு கார்களும் பலத்த சேதமடைந்தன.