தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் டயர் வெடித்து விபத்து: பெரம்பலூர் அருகே இருவர் காயம், 2 பேர் பலத்த காயம்! - perambalur district news

பெரம்பலூர்: நாரணமங்கலம் அருகே சென்றுகொண்டிருந்த காரின் முன் டயர் வெடித்து எதிர்புறம் வந்த 2 இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரண்டு பேர் காயமும் இருவர் பலத்த காயமும் அடைந்துள்ளனர்.

car accident in perambalur

By

Published : Nov 19, 2019, 2:49 PM IST

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சேரி நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அவ்வாறு சென்றுகொண்டிருந்த காரின் டயர், நாரணமங்கலம் அருகே வெடித்து சாலையின் மையத்தடுப்பைத் தாண்டி சாலையின் எதிர்புறம் வந்துகொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த பாடலூர் கிராமத்தைச் சேர்ந்த பழமலை, நாரணமங்கலத்தைச் சேர்ந்த சின்ராசு ஆகிய இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தனர்.

இவர்களுக்குப் பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன், அவரது மனைவி கீதா ஆகியோர் லேசான காயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த காயமடைந்த பழமலை, சின்ராசு ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பாடலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ஊர் குளத்தைத் தூர்வாரி, குளக்கரையில் 400 மரக்கன்றுகள் நட்ட கிராம மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details