பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் குறித்து பொதுமக்களிடையே தீவிரப் பரப்புரை மேற்கொள்வதற்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
கரோனா குறித்து பரப்புரை: பெரம்பலூர் ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி
பெரம்பலூர்: கரோனா வைரஸ் தாக்கம் குறித்து பொதுமக்களிடையே தீவிரப் பரப்புரை மேற்கொள்வதற்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
Perambalur collecter corona pledge
உறுதிமொழியின்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
- அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்,
- பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது,
- கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்,
- தகுந்த இடைவெளியைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.